Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 4, 2023

ஆன்லைன் படிப்புகளுக்கு ஸ்காலர்ஷிப் தொடரும்: யு.ஜி.சி.,

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையிலான, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட, 23 திட்டங்கள், அடுத்த கல்வி ஆண்டிலும் தொடரும்' என, பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது.

பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., செயலர் மனீஷ் ஜோஷி, கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

'ஸ்வயம்' எனப்படும் 'ஆன்லைன்' படிப்பு நடத்துதல், உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, பட்டியலினம் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, 'நெட், செட்' போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி போன்ற திட்டங்கள் தொடரும்.

அதேபோல், ஆராய்ச்சி மாணவர்களாக உள்ளவர்களுக்கு, அவர்களின் பணித் திறன் அடிப்படையில், விருது வழங்குதல், சமுதாய கல்லுாரிகள் ஏற்படுத்தி, திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், ஹிந்தி பட்டப்படிப்பு தொடர்பான துறைகளை உருவாக்குதல் போன்ற திட்டங்களும், அடுத்த கல்வி ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது முடிவுக்கு வரும், 2022 - 23ம் கல்வி ஆண்டுடன், யு.ஜி.சி.,யின் பல திட்டங்கள் முடியும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதனால், இந்த திட்டங்களில் புதிய மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டிலும் 'ஸ்காலர்ஷிப்' மற்றும் பயிற்சி உள்ளிட்ட 23 திட்டங்கள் தொடரும் என அறிவித்துள்ளதால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

No comments:

Post a Comment