Breaking

Monday, May 22, 2023

நாளை மறுநாள் முதல்... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25ம் தேதி நடைபெறுகிறது.

மேலும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ஆம் தேதி நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்று, இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment