JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
முடக்கு வாதம் என அழைக்கப்படும் நோயை குணப்படுத்த நிறைய மருந்துகள், மாத்திரைகள் எடுத்து பயன்படுத்தி இருப்போம்.
பலவிதமான சிகிச்சைகளும் எடுத்து வந்திருப்போம். ஆனால் இவை அனைத்தும் எந்தவித பயனும் நமக்கு தந்திருக்காது. இந்த பதிவில் மூட்டுவலிகள், முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய சில எளிமையான வழிமுறைகளை காணலாம்.
* வாதத்தை குணப்படுத்த வேண்டும் என்றால் முதலில் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். வயிற்றை சுத்தம் செய்யும் பேதி மருந்தை பயன்படுத்தி வயிற்றை சுத்தம் செய்தாலே வாதம் என்பது குணமாகத் தொடங்கும். வயிற்றை சுத்தம் செய்தாலே வாதம் சமநிலைப்படும். வாதம் சமநிலையடைந்தால் வலிகள் அனைத்தும் குறையத் தொடங்கும்.
* அடுத்து வாதத்தை குணப்படுத்த நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு காரணியாகும். சரியான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட்டு வந்தால் வாதம் குறையும். கிழங்கு வகைகள் வாதத்தை அதிகரிக்கும் என்பதால் இதை சாப்பிடக் கூடாது. அரிசியை குக்கரில் வேகவைத்து சாப்பிடுவதை தவிர்த்து அரிசியை சட்டியில் நன்கு வேகவைத்து சாப்பிடவேண்டும்.
* வாதத்தை குறைக்க ஒத்தடம் கொடுப்பது சிறந்த பயனை தரும். மூலிகை கலந்த எண்ணெய்களை பயன்படுத்தி மூட்டுகளில் மூட்டு வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். காலை அல்லது மாலை வெயிலில் சிறிது நேரம் நிற்க வேண்டும்.
* சிறிய சிறிய உடற்பயிற்சிகள் செய்து வெந்நீர் பயன்படுத்தி ஒத்தடம் கொடுத்து வரலாம். அல்லது குளித்தும் வரலாம்.
* கொள்ளு மற்றும் கல்லுப்பை பயன்படுத்தி ஒத்தடம் கொடுத்து வரலாம். ஆமணக்கு இலை மற்றும் புளி இலைகளை பயன்படுத்தி ஒத்தடம் கொடுத்து வரலாம்.
* வாதம் உள்ளவர்களுக்கு வாதத்தை குணப்படுத்த வருத்தம் பட்டு பொருள் சிறந்த நிவாரணம் தரக்கூடியது. இந்த வருத்தம் பட்டை சூரணமாக எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் வாதம் சரியாகும்.
* வாதம் உள்ளவர்கள் மாவிலங்கு பட்டையை பயன்படுத்தலாம். இந்த மாவிலங்கு பட்டையை சுடு தண்ணீரில் சேர்த்து காயவைத்து குடித்து வருவதால் வாதம் படிப்படியாக குறையத் தொடங்கும்.
* மரமஞ்சளையும் வாதம் உள்ளவர்கள் மருந்தாக பயன்படுத்தலாம்.
* வாதம் உள்ளவர்கள் இஞ்சியை மருந்துப் பொருளாக பயன்படுத்தலாம். இரவு தூங்கச் செல்லும் முன்பு இஞ்சியை சுக்காக பயன்படுத்தி அல்லது சுக்கு பொடியை ஒரு டம்ளர் பாலில் கலந்து அதில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியை சேர்த்து இரவு தூங்கும் முன்பு குடித்து வரலாம்.
* வாதம் உள்ளவர்கள் வாதத்தை குணப்படுத்த வாதநாராயண தைலத்தை பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment