JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வியர்வையால் ஏற்படும் வியர்குருக்களை ஒரே நாளில் பக்க விளைவுகள் இல்லாமல் நீக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நமக்கு ஏற்படும் வியர்குருவை நீக்க பயன்படுத்தப் போகும் பொருள் சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் தான். சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை பயன்படுத்தி எவ்வாறு வியர்குருவை நீக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
வியர்குரு நீங்க கஞ்சித் தண்ணீரை பயன்படுத்தும் முறை.
சாதம் வடித்த கஞ்சித் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். நன்கு ஆற விடவும். ஆறிய பிறகு அதன் மேல் மேலாடை இருக்கும். அதை களைந்துவிட்டு கஞ்சியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வியர்குரு உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும்.
இதை ஒரு நாளுக்கு மூன்று முறை செய்ய வேண்டும். இதை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது வியர்குரு நீங்கும். குழந்தைகளுக்கு வியர்குரு இருந்தால் இதை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தி பாருங்கள். அலர்ஜி மாதிரி பிரச்சனை ஏற்பட்டால் குழந்தைகளுக்கு இதை பயன்படுத்த வேண்டாம்.
இந்த கஞ்சியில் குளிர்ச்சி தன்மை அதிகளவு உள்ளது. அதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது.
No comments:
Post a Comment