தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
தற்போது இந்த திட்டம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 20ஆம் தேதி இந்த பணி தொடங்கிய நிலையில் தற்போது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரேஷன் அட்டைதாரர்கள் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் உரிய தேதியில் விண்ணப்பங்களை பெற தவறியவர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே விடுபட்டவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 4 ஆம் தேதி வரை விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment