Friday, July 28, 2023

கன்னத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க என்ன செய்யலாம்?


மரபுக் காரணங்களாலும் ஹார்மோன்களாலும் சிலருக்கு முகத்தில் சதைப்பற்று அதிகம் இருக்கலாம். சில பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள்.

ஆனால், முகத்தில் சதை தொங்கும். அவ்வாறு இருந்தால் முகத்தை கட்டுக்கோப்பாக மாற்ற தேவையற்ற சதைப் பகுதிகளைக் குறைக்க உணவு முறையில் சில மாற்றங்களைப் பின்பற்ற வேண்டும். உடல் எடை அதிகமாக இருப்பதன் காரணமாகவும் முகத்தில் சதை அதிகம் தோன்றலாம். எனவே உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

கலோரி குறைந்த உணவுகளைச் சாப்பிட்டு உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக உடல் எடை குறையும்போது முகத்தில் உள்ள கொழுப்பும் கரையும். இதையும் படிக்க | நம்பிக்கையும் உண்மையும்: பழங்களை உணவுடன் சேர்த்து சாப்பிடலாமா? அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதுவும் தேவையற்ற கழிவுகளை உடலில் இருந்து வெளியேற்றும். உணவில் உப்பு மற்றும் சர்க்கரை அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். இது முகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். துரித மற்றும் பொருந்தா உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற உடல் கொழுப்பை எரிக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். உடல் எடை சரியாக இருந்தும் முகத்தில் சதைகள் அதிகம் இருந்தால் முகத்திற்குத் தேவையான பயிற்சிகளைச் செய்யலாம். கன்னப்பகுதி, தாடை, தொண்டைப் பகுதியில் உள்ள சதைகளைக் குறைக்க லேசான பயிற்சிகள் உள்ளன.

இரவில் குறைந்தது 7-8 மணி நேரம் நல்ல தூக்கம் இருக்க வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதலைக் குறைக்க வேண்டும் அல்லது முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். சருமத்தில் ரத்த ஓட்டம் சீராக அவ்வப்போது மசாஜ் செய்ய வேண்டும். இதையும் படிக்க | பொருந்தா உணவுகளைச் சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுமா?

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News