எல்லாவற்றுக்கும் மேலாக நம்முடைய மூளைக்கும் உடலின் மற்ற பாகங்களுக்கும் இடையே ஆரோக்கியமான தொடர்பை பராமரிப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கையாகவே பல உணவுகளில் கால்சியம் காணப்படுகிறது, தவிர மார்க்கெட்டில் ஏராளமான கால்சியம் சப்ளிமென்ட்ஸ் கிடைக்கின்றன.

நமக்கு கால்சியம் ஏன் தேவை.?
நம் உடலில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னரே குறிப்பிடப்படி நம் உடலில் உள்ள கால்சியத்தில் 99%, எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படுகிறது.
தசை சுருங்குதலை (muscle contraction) கட்டுப்படுத்த கால்சியம் உதவுகிறது.
ரத்தம் உறைதலில் (blood clotting) கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
சில முக்கிய என்சைம்கள் சரியாக வேலை செய்ய கால்சியம் அவசியம் தேவைப்படுகிறது.
கால்சியம் நிறைந்த உணவுகள் என்ன.?
யோகர்ட்
பால்
சீஸ்
டோஃபு
பச்சை இலை காய்கறிகள்
போர்ட்ஃபிட்டட் ஃபரூட் ஜூஸ்
நட்ஸ் & சீட்ஸ் குறிப்பாக பாதாம், எள் மற்றும் சியா விதைகள்
உடலில் அதிக கால்சியம் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன.?
பொதுவாக டயட்டரி கால்சியம் பாதுகாப்பானது என்றாலும் உடலில் அதிக அளவு கால்சியம் சேருவது சில தீமைகளை ஏற்படுத்தும். Cleaveland Clinic-ன் கூற்றுப்படி உடலில் கால்சியம் லெவல் அதிகமாக இருப்பது (Hypercalcemia), தலைவலி முதல் உயிருக்கு ஆபத்தான இதயப் பிரச்சனைகள் வரை பல சிக்கல்களை ஏற்படுத்த கூடும். பலருக்கு Hypercalcemia இருப்பதற்கான வெளிப்படையான அறிகுறிகள் தெரிவதில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. எனினும் சில நேரங்களில் மூலம் உடலில் கால்சியம் லெவல் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுத்தலாம்.
எலும்பு வலி, தலைவலி, அதீத களைப்பு, தொடர் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் தாகம் எடுப்பது, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல் அல்லது பசியின்மை, தசை வலிகள் அல்லது தசைப்பிடிப்பு, பலவீனம், கிட்னி ஸ்டோன்ஸ், நினைவாற்றல் பிரச்சனைகள், குழப்பம், அடிக்கடி எரிச்சல் உணர்வது ஏற்படுவது மற்றும் மனச்சோர்வு, சிறுநீரக செயலிழப்பு. இவை தவிர அதிகரித்த இதயத் துடிப்பு, மயக்கம் மற்றும் அரித்மியா போன்ற கார்டியாக் அறிகுறிகள்.
வயதிற்கு ஏற்ப எவ்வளவு கால்சியம் நமக்கு தேவை.?
Office of Dietary Supplements-ன் பரிந்துரைப்படி, மக்களுக்கு பின்வரும் அளவு கால்சியம் தேவைப்படுகிறது:
பிறந்த முதல் 6 மாதங்களுக்கு அதாவது 0 - மாதங்களுக்கு 200 மில்லி கிராம்ஸ்
7 - 12 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு 260 மில்லி கிராம்ஸ்
1-3 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு 700 மில்லி கிராம்ஸ்
4 - 8 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு 1000 மில்லி கிராம்ஸ்
9-18 ஆண்டுகள் வரையிலானவர்களுக்கு 1,300 மில்லி கிராம்ஸ்
19 - 50 ஆண்டுகள் வரையிலானவர்களுக்கு 1,000 மில்லி கிராம்ஸ்
51 - 70 ஆண்டுகள் வரையிலான ஆண்களுக்கு 1,000 மில்லி கிராம்ஸ் மற்றும் பெண்களுக்கு 1,200 மில்லி கிராம்ஸ்
71 வயது மற்றும் அதற்கு மேல் 1,200 மில்லி கிராம்ஸ்
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு வயதைப் பொறுத்து 1,000-1,300 மில்லி கிராம்ஸ்
No comments:
Post a Comment