Monday, July 24, 2023

இன்ஜினியரிங் தேர்ச்சி சதவீதம் வெளியீடு

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 380க்கும் மேற்பட்ட தன்னாட்சியற்ற கல்லுாரிகளில், இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்ச்சி சதவீத விபரத்தை, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டு உள்ளது.


அதில், சேலத்தில் உள்ள இந்திய துணிநுால் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனமான, மத்திய அரசின் நிறுவனம், மாணவர்களின் தேர்ச்சியில், 90.80 சதவீதத்துடன் முதலிடம் பெற்றுள்ளது.வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ்.ஜி., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ்.ஆர்.ஆர்.இன்ஜினியரிங் கல்லுாரி, மத்திய அரசின் சென்ட்ரல் எலக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் படித்த மாணவர்கள், 80 முதல் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 பத்து கல்லுாரிகள், 70 முதல் 80 சதவீதம்; 43 கல்லுாரிகள், 50 முதல் 70 சதவீதம் வரையிலும் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும், 10 கல்லுாரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. ஏழு கல்லுாரிகளில், 1 சதவீதத்தை விட குறைவாகவும்; 23 கல்லுாரிகள், 1 முதல் 5 சதவீதம் வரையிலும் தேர்ச்சி பெற்றுஉள்ளன. 

இந்த தேர்ச்சி சதவீதத்தை பார்த்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு செல்லும் மாணவர்கள், தங்களுக்கான கல்லுாரிகளை தேர்வு செய்யும் வகையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை, www.tneaonline.org/ என்ற இணைய சேவையில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News