Monday, July 31, 2023

நலத்திட்டத்தில் முறைகேடு? பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளில், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளதால், மாணவர்கள் விபரங்களை செயலியில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில், 50,000த்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன.

இவற்றில், 38,000த்துக்கும் மேற்பட்டவை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள். இவற்றில் படிக்கும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரசு சார்பில், பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள் உள்ளிட்ட, 14 வகையான இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

சில அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்காமல், தில்லுமுல்லு நடப்பதாக, பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்துள்ளன.

அதிகாரிகளின் கள ஆய்வுகளில், நலத்திட்ட உதவிகளுக்கான பதிவுகளில் முரண்பாடு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், இலவச நலத்திட்ட உதவிகள் மற்றும் அதை பெற்ற மாணவர்களின் விபரங்களை, பள்ளிக்கல்வியின் செயலியில் பதிவேற்ற, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


செயலியில் பதிவேற்றும் விபரங்கள், எந்த நேரமும் நேரடி கள ஆய்வு செய்யப்பட்டு, சோதனை செய்யப்படும். அதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News