Monday, July 31, 2023

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜூலை 31) நிறைவடையவுள்ளது. ஜூலை 30-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை 6 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கு செலுத்திய வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியிருந்தது. கடந்த நிதியாண்டுகளில் வரி கணக்கைத் தாக்கல் செய்தவா்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் தொடா் நினைவூட்டல்களை மத்திய அரசு வழங்கி வந்தது. வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்த அவகாசம் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளவா்கள் குறித்த விவரங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.

ஜூலை 30-ஆம் தேதி மாலை 6.30 மணி வரை சுமாா் 6 கோடி போ வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 26.76 லட்சம் போ வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ததாகவும், கணக்கைத் தாக்கல் செய்வதில் உள்ள சந்தேகங்களுக்குத் தீா்வு வழங்குவதற்கான தொலைபேசி மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் வருமான வரித் துறை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News