Monday, July 31, 2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு!. கல்லூரி பதிவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு!. முழுவிவரம் இதோ!

நடப்பு கல்வி ஆண்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை பெறப்பட்டன.

அதனை தொடர்ந்து ஜூலை 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மாணவர்களுக்கான கல்லூரி ஒதுக்கீடு ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 6ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு ஆகஸ்ட் 7 முதல் 11ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment