தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பினை, உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது சம்பந்தமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2022-23ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து, கடந்த மே 8ம் தேதி ரிசல்ட்களும் வெளியாகியிருந்தன.. இதையடுத்து, உயர்கல்விகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க ஆரம்பித்தனர்.
தமிழகம்முழுவதும் செயல்பட்டு வரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் ஆரம்பமானது..

விண்ணப்பம்: அதன்படி, மாணவர்கள் www.tngasa.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க துவங்கினர்.. கடந்த மே 8ம் தேதியிலிருந்து, மே 22ம் தேதி வரை இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது. இதைத்தவிர நேரடியாகவே கல்லூரிகளின் உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பித்து வந்தனர்.
164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1,07, 299 இடங்களில் சேர 2,46, 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.. இந்த விண்ணப்பங்களில், மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை லிஸ்ட் ரெடியானது..
கலந்தாய்வு: அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மே 29ம் தேதி முதல் 31 ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட்டது.. பிறகு, ஜுன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜுன் 12 முதல் ஜுன் 30ம் தேதி வரை 2ம் கட்ட கலந்தாய்வும் நடந்தது.. கல்லூரிகளில் 84,899 மாணவ மாணவியர்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இவர்களில் அரசுப் பள்ளிகளில் படித்து புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 23,295 மாணவிகளும் அடங்குவர்.
இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கு நேற்று 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளன.. காலியாக உள்ள இடங்களுக்கு இன்று அதாவது ஜூலை 4ம் தேதி முதல் மறுபடியும் இனசுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அதன்படி இன்று ஜூலை 4ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், நாளை ஜூலை 5ம் தேதி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 6ம் தேதி ஆதிதிராவிடர் வகுப்பினருக்கும், ஜூலை 7ம் தேதி அனைத்து பிரிவினருக்கும் நேரடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை: இதனிடையே, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்றுமுதல் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்க்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித்துறை ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில், 'தமிழகத்தில் உள்ள மொத்தம் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை ஏழாம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளில் 1,07,299 இடங்கள் காலியாக உள்ளன.
அதில் 84 ஆயிரத்து 899 மாணவர்கள் ஜூன் 30-ம் தேதி வரை சேர்ந்துள்ள நிலையில் வருகின்ற ஜூலை நான்காம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment