Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 1, 2023

உஷார் மக்களே... பொது இடங்களில் செல்போனை சார்ஜ் செய்கிறீர்களா?... உங்கள் பணம் பறிபோகலாம்...!

ரயில் நிலையம், பேருந்து நிலையம், மருத்துவமனை என மக்கள் நடமாடும் பொது இடங்கள் அனைத்திலும் தற்போது சார்ஜிங் போர்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அவசர காலங்களில் போனை சார்ஜ் செய்வதற்கு பலர் இந்த சார்ஜிங் போர்ட்டுகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு விதத்தில் இது மிகவும் வசதியான ஒன்றாக இருந்தாலும், சமீப காலமாக இந்த சார்ஜிங் போட்டுகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

"ஜூஸ் ஹேக்கிங்" எனப்படும் புதிய ஹேக்கிங் முறையை மோசடிக்காரர்கள் இந்த பொது சார்ஜிங் போர்ட்டுகளில் பயன்படுத்துகின்றனர். இந்த புது வித மோசடியானது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளில பரவி வருகிறது. மேலும் எஃப்பிஐ-யும் அமெரிக்க மக்களுக்கு பொது இடங்களில் உள்ள சார்ஜிங் போர்டுகளை பயன்படுத்தும் போது ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெளியே செல்லும்போது முடிந்த அளவு சொந்தமாக பவர் பேங்குகளை பயன்படுத்தும் படியும் அமெரிக்க மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இப்படி அனைவரும் பயப்படும் அளவிற்கு இருக்கும் "ஜுஸ் ஹேக்கிங்" என்றால் என்னவென்று இப்போது பார்ப்போம்.

"ஜூஸ் ஹேக்கிங்" என்பது ஒருவித சைபர் தாக்குதல் வழிமுறையாகும். அதாவது ஹேக்கர்கள் பொது இடங்களில் போலி சார்ஜிங் நிலையங்களை அமைத்து விடுவார்கள். இந்த சார்ஜிங் நிலையங்களில் யாரேனும் தன்னுடைய மொபைலை சார்ஜ் செய்யும்போது அவரது மொபைல் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் என அனைத்துமே ஹேக்கர்களிடம் சென்று விடும்படி இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சில சமயங்களில் எவ்வாறு சார்ஜிங் செய்யும்போது அந்த மொபைலில் ஹேக்கர்கள் தங்கள் உருவாக்கிய வைரஸ்களை செலுத்தி விடுவார்கள். இதன் மூலம் அந்த மொபைலை இவர்கள் தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.

இதில் யூசர்களுக்கு இருக்கும் மிகவும் கடினமான செயல்முறையே, எது போலி சார்ஜிங் ஸ்டேஷன், எது உண்மையான சார்ஜிங் ஸ்டேஷன் என்பதை கண்டறிவது தான். இது போன்ற சைபர் தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

எங்கேயும் வெளியே செல்லும்போது முடிந்த அளவு உங்களுக்கென தனியாக பவர் பேங்க் சார்ஜரை எடுத்துக்கொண்டு செல்வது நல்லது.

பயணம் செல்லும் போது கண்டிப்பாக போர்டபிள் பவர் பேங்க் கொண்டு செல்லவும்.

மேலும் தற்போது சந்தையில் கிடைக்கும் யூ எஸ் பி டேட்டா ப்ளாக்கரை நீங்கள் பயன்படுத்தலாம். இதை நீங்கள் சார்ஜ் செய்யும்போது உங்களுடைய டிவைஸிற்கும் சார்ஜிங் ஸ்டேஷனுக்கும் இடையில் டேட்டா பரிமாறப்படுவதை தடுக்கும்.

மொபைலில் ஆட்டோமேட்டிக் நெட்வொர்க் உடன் கனெக்ட் செய்யும் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கவும்.

சீரான இடைவெளியில் அவ்வபோது அளிக்கப்படும் அதிகாரப்பூர்வ சாப்ட்வேர் அப்டேட்டுகளை மொபைலில் இன்ஸ்டால் செய்து வைக்கவும்.

No comments:

Post a Comment