Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 11, 2023

குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வெளியிடுவது தொடா்பான அறிக்கையை புதன்கிழமை (அக். 11) தோ்வாணையச் செயலா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கண்மணி , கீதா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2022, மாா்ச் 30-இல் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, காலியாக உள்ள 7,301 இடங்களுக்கு ஜூலை 24-இல் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத சுமாா் 22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இந்த நிலையில், காலிப் பணியிட எண்ணிக்கை 10,117 ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்க்கும் பணிகளும் நடைபெற்றன. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியலில், எங்களது பெயா்கள் இல்லை. இந்தத் தோ்வில் நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், விடைக் குறிப்புகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா். 

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டனவா? இல்லையெனில், உடனடியாக விடைக் குறிப்புகளை வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் அறிக்கையாக புதன்கிழமை (அக். 11) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News