Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 5, 2023

உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

Add This Number In Your Whatsapp Groups -6379884356
உடல் சூடு முதல் மலசிக்கல் வரை அனைத்து வித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு பானத்தில் தீர்வு கிடைக்கும்!!

நம்மில் பெரும்பாலானோர் அதிகப்படியான உடல் உஷ்ணத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம்.இந்த உடல் சூடு இருப்பவர்கள் பித்தம்,தலைமுடி உதிர்தல்,வாய்ப்புண் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.அதேபோல் உரிய நேரத்தில் மலம் கழிக்காமல் அதை அடக்குவதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த அனைத்து பாதிப்புகளையும் சரி செய்ய இயற்கை வழிகளை தேர்ந்தெடுத்து அதை பாலோ செய்வதினால் விரைவில் உரிய பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி

*சோம்பு - 1 தேக்கரண்டி

*சீரகம் - 1 தேக்கரண்டி

*கற்கண்டு - 1 துண்டு

செய்முறை:-

முந்தின நாள் இரவு ஒரு பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை,1 தேக்கரண்டி சோம்பு(பெருஞ்சீரகம்) மற்றும் சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து ஊற வைக்கவும்.

பின்னர் அடுத்த நாள் காலையில் அடுப்பில் பாத்திரம் வைத்து ஊற வைத்துள்ள கொத்தமல்லி விதை + சோம்பு + சீரகம் தண்ணீரை சேர்க்கவும்.அதன் பின் 1 துண்டு கற்கண்டு சேர்த்து அதை மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.அடுத்து ஒரு டம்ளர் எடுத்து தயார் செய்து வைத்துள்ள பானத்தை வடிகட்டி பருகவும்.

*சோம்பில் பொட்டாசியம், கால்சியம், அயன், மெக்னீசியம், செலினியம் அதிகளவு  இருக்கின்றது.

*கற்கண்டு குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இவை சளி, தொண்டை பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றது.

*சீரகத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது.இவை செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.அதேபோல் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது.

*கொத்தமல்லியில் பைட்டோ கெமிக்கல்கள்,வைட்டமின்கள் ஏ,சி மற்றும் கே உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.The post

No comments:

Post a Comment

Popular Feed