Search This Blog

Wednesday, November 29, 2023

அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் 15,000 பணியிடம் நிரப்பப்படுகிறது

0 comments
TNPSC சார்பில் 15,000 பணியிடம் நிரப்ப திட்டம் … தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ ,குரூப் 4 உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட தகுதித் தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது.

மேலும், ஆண்டுதோறும் இந்த தகுதித்தேர்வுகளின் அடிப்படையில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அரசு துறைகளால் நிரப்பப்பட்டு கொண்டு வருகிறது.


அந்த வகையில், இன்னும் சில நாட்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், எந்தாண்டிலும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 15,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டு உள்ளதாக TNPSC பணி நியமன ஆணை முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment