Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 4, 2023

CBSE - 10, 12-ம் வகுப்புகளுக்கு ஜன.1 முதல் செய்முறை தேர்வு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 10, 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு தேதிகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்விவரம் வருமாறு: செய்முறைத் தேர்வு ஜனவரி 1-ல் தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நடைபெறும்.

மேலும், குளிர்கால பள்ளிகள் செய்முறைத் தேர்வை நவம்பர் 14 முதல் டிசம்பர் 14-ம் தேதிக்குள் நடத்திக் கொள்ளலாம். இந்த பள்ளிகள் தேவைக்கேற்ப ஒருநாளில் 3 சுற்றுகளாக தேர்வை நடத்தலாம். ஆனால், ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 30 பேர் மட்டுமே இருக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை www.cbse.gov.in வலை தளத்தில் அறியலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment