முக்கிய செய்திகள்

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 27, 2023

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சி ரத்து - SCERT Proceedings

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தொடர்மழையின் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் விடுப்பு வழங்கப்பட்டதால் பள்ளி வேலை நாள்கள் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான நேரடி பயிற்சியினைத் தவிர்த்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு வடிவமைத்து வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளின் வழிகாட்டுதலோடு மூன்றாம் பருவத்திற்கான கட்டகங்களை வகுப்பறையில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் , ஆசிரியர் கையேட்டில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீட்டில் ( QR Code ) கட்டகத்திற்காகப் பதிவேற்றம் செய்யப்படும் வழிகாட்டுக் காணொலிகள் ( Videos scribes ) மற்றும் வகுப்பறைச் செயல்பாட்டுக் காணொலிகளைப் ( Classroom demo videos ) பயன்படுத்தியும் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகக் கையாள அறிவுறுத்துமாறும் , மூன்றாம் பருவப் பயிற்சி சார்ந்த பாடக்கருத்துகளை மின் பாடப்பொருளாக kalvi TV official Youtube channel- லில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் பயன்படுத்தி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும் வகுப்பறையைச் சிறப்பாகச் செயல்படுத்திட அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து ஆசிரியர்க அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது .

எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான ஆசிரியர் கையேட்டினைப் பயன்படுத்தி வகுப்பறைச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல் -சார்பு SCERT Proceedings

EE Circular -SCERT Proceedings - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News