தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, பள்ளிகளுக்கு ஜூன் 10ம் தேதிவரை கோடை விடுமுறை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1 அன்று பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதன்படி ஜூன் 5 அல்லது 6ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 10 வரை தள்ளிப்போகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment