Join THAMIZHKADAL WhatsApp Groups

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தொப்புளில் எண்ணெய் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.தொப்புள் நம் உடல் நரம்புகளை இணைக்கும் மைய பகுதி ஆகும்.தொப்புளில் தேங்காய் எண்ணெய்,விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் வைத்து மஜாஜ் செய்து விட்டு படுத்தால் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும்.
அதுவும் வெயில் காலத்தில் தொப்புளில் எண்ணெய் வைப்பது மிகவும் அவசியம் ஆகும்.கோடை வெயிலால் உடல் அதிகளவு உஷ்ணத்தில் இருக்கும்.உடல் சூட்டால் மஞ்சள் காமாலை,சூட்டு கொப்பளம், அம்மை, பித்தம், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
எனவே உடல் சூட்டை தணிக்க தொப்புளில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சில துளிகள் சேர்த்து மஜாஜ் செய்து விட்டு படுக்கவும்.
தொப்புளில் எண்ணெய் விடுவதால் கண் வறட்சி,சரும பிரச்சனை,நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும்.அதேபோல் கோடை காலத்தில் கண்களை சுற்றி தேங்காய் எண்ணைய் சில துளிகள் கொண்டு மஜாஜ் செய்தால் கண் சூடு,கண் எரிச்சல் நீங்கும்.
No comments:
Post a Comment