Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, March 12, 2024

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : மத்திய அரசு அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த ஹிந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா 2019ம் ஆண்டு பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், புதிய விதிகள் வெளியிடப்படாததாலும் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) இதுவரை அமல்படுத்தவில்லை. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ.,வில் வழி இல்லை.

அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர், புத்த மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க இச்சட்டம் வகை செய்கிறது.

No comments:

Post a Comment