Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 21, 2024

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கவும் - Direct Checking Link

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குச் சொந்தமானது இந்தியா. அந்த ஜனநாயகத்தை உறுதி செய்பவை தேர்தல்களும், அவற்றில் மக்களின் பங்களிப்புமே.

எந்தவொரு தேர்தலிலும் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். மேலும், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். சிலசமயம் வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர் விடுபட வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் உங்கள் பெயர், தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டியது அவசியமாகிறது. இதைத் தேர்தல் ஆணையம் வழங்கும் பல்வேறு வசதிகளின் மூலமாக மிக எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.



உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிய

தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP-யின் (https://electoralsearch.eci.gov.in/) எலக்ட்ரோல் தேடல் பக்கத்துக்குச் செல்லுங்கள் (Electoral Search). அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்துகொள்ள முடியும்.

1. உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.
2. வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.

EPIC எண் இல்லையெனில்,

NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by Details (தகவல்களை உள்ளீடு செய்து) என இருப்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களைப் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சமயத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

EPIC எண் இருந்தால்,

NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by EPIC No என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, அங்குள்ள கட்டத்தில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

இதேபோல புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க, புதிய வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள, ஏற்கெனவே உள்ள தகவல்களில் திருத்தம் மேற்கொள்ள, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்நீக்க, இவற்றிற்கான படிவங்களை தரவிறக்க எனப் பல்வேறு வசதிகளும் இணையத்திலேயே கிடைகின்றன. இதுதவிர மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கும் கட்சிகளைத் தடுக்க CVigil என்னும் ஆப் ஒன்றை வெளியிட்டு நடத்திவருகிறது தேர்தல் ஆணையம். உங்களுடைய பகுதியில் நடக்கும் தேர்தல் முறைகேடுகளை இந்த ஆப் மூலம் புகார் செய்யலாம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலம் சென்றவுடன் உங்கள் மாவட்டம்,சட்டமன்ற தொகுதியை கேட்கும் அதை தெரிவு செய்து சமர்பிக்கவும் பின் உங்கள் தொகுதியின் அனைத்து வார்டு லிஸ்டுகளை காட்டும் அதில் தங்களுக்குரியதை எடுத்து சரிபார்த்துக்கொள்ளவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News