இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ம் தேதி முதல் ஜூன் 1 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அந்த வகையில் தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு கட்டத்தின் வாக்குப்பதிவு நாளிலும் இந்தியா முழுவதும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய சட்டப்பிரிவு 135B-ன் கீழ் ஜனநாயக கடைமையாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சம்பளம் அளிக்கப்பட வேண்டும்.
ஆனால் இதனை பல நிறுவனங்கள் மதிக்காமல், ஊழியர்களை பணிக்கு வரச்சொல்லி கட்டாய வேலைக்கு அழைப்பது பல இடங்களில் நிகழ்ந்து வருகிறது. சட்டத்தை உறுதிப்படுத்தி மக்கள் எந்த இடையூறும் இன்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது மிக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment