Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 2, 2024

இந்த ஆவணங்களெல்லாம் இருந்தால் தான் இலவச வீடு- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


தமிழகத்தில் இருக்கின்ற குடிசை பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்த திட்டம் அண்மையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யபட்டது.இந்த வாரியத்தின் கீழ் குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புறத்தில் குடிசையில் வசித்து வரும் ஏழைக் குடும்பங்களுக்கு குடிநீர்,மின்சாரம்,திடக் கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடுகள் கட்டித்தரப்படுகிறது.இந்நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடு பெற ஆதார் கட்டாயம் என்று என தமிழக அரசு தனது அரசாணை தெரிவித்திருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அரசாணை:

"பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக ஆதார் எண்ணைப் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் மூலமாக பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளைச் செய்து கொடுக்கலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணைப் பெறும் வரை விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம்,பான் அட்டை,கடவுச்சீட்டு, குடும்ப அட்டை,வாக்காளர் அடையாள அட்டை,மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை,கிசான் அட்டை,ஓட்டுநர் உரிமம்,தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News