Thursday, September 19, 2024

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு.? பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு அதிரடி உத்தரவு..!!


அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீட்டை ஏன் வழங்க கூடாதுஎன உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பூபேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள் இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகளை பெற முடியவில்லை.

எனவே ராமநாதபுரம் நகரில் அரசு மேல் நிலைபள்ளி தொடங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளி அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள், மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரத்தில் இதுநாள் வரை அரசு உயர் நிலைபள்ளி ஏன் அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். ராமநாதபுரம் மாணவர்கள் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டும் எனில் ஒன்பது கி.மீ தூரம் செல்ல வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தமிழகத்தில் வட்டம், மாவட்டத் தலைநகர்களில் அரசு உயர்நிலை, மேல் நிலை பள்ளிகளை அரசு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில், படிக்கும் மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் தமிழக அரசால் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஏன் வழங்க கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பள்ளி கல்வி துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News