பொதுவாகவே விமான நிலையங்களுக்கு சென்றால் அங்கே சாதாரணமான டீ, காபி உள்ளிட்டவற்றின் விலை கூட பல மடங்கு அதிகமாக இருக்கும்.
எனவேதான் பெரும்பாலானவர்கள் விமான நிலையங்களில் உணவுகளை வாங்கி உண்பதை தவிர்ப்பார்கள்.இந்த நிலையில் மத்திய அரசு விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவு மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக என்டிடிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி மத்திய அரசு விமான நிலையங்களில் மலிவு விலையில் உணவுகளை விற்பனை செய்யும் நிலையங்களை திறக்க முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் பல கட்ட ஆய்வுகளை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் தான் இத்தகைய முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கொல்கத்தா விமான நிலையத்தின் சுடுதண்ணீர் மற்றும் டீ பையைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு டீயின் விலை 340 ரூபாய் என கூறியிருந்தார்.
தி காபி பீன் அண்ட் டி லீஃப் என்ற ரெஸ்டாரண்ட் தான் இப்படி 340 ரூபாய்க்கு இதனை விற்பனை செய்கிறது எனக் கூறியிருந்தார்.சில ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்னை விமான நிலையத்தில் இதே டீயை எ80 ரூபாய்க்கு வாங்கினேன். அப்போது இது குறித்து நான் என்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்.
உடனடியாக விமான போக்குவரத்து துறை ஆணையம் இதன் மீது நடவடிக்கை எடுத்தது என குறிப்பிட்டிருந்தார்.அவருடைய இந்த பதிவு மற்றும் பல்வேறு விமான பயணிகளின் புகார்களையும் கணக்கில் எடுத்துக் கொண்ட விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இது தொடர்பாக அமைச்சர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி விமான நிலையங்களில் உணவு மற்றும் குளிர்பானங்களை குறைந்த விலையில் வழங்க பொருளாதார மண்டல விற்பனையகங்களை திறக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சரான ராமோகன் நாயுடு அண்மையில் ஒரு கூட்டத்தை நடத்தினார் அந்த கூட்டத்தில் இதற்கான ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாம்.முதல் கட்டமாக புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய விமான நிலையங்களில் இந்த மலிவு விலை உணவு விற்பனை நிலையங்கள் திறக்கப்படும். இத்தகைய கடைகளில் அமர்ந்து உண்பதற்கு இருக்கைகள் இருக்காது,
கவுண்டரில் பணத்தை செலுத்தி விட்டு உணவை பெற்றுக் கொண்டு நாம் காத்திருப்பு இடத்தில் சென்று அதனை அருந்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சாதாரண மக்களும் கூட விமானங்களில் பயணம் செய்யும் நிலையில் இது போன்ற குறைந்த விலை கொண்ட உணவு நிலையங்கள் பயனுள்ளதாகவே இருக்கும்.
No comments:
Post a Comment