திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு சித்த மருத்துவ பிரிவு, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய சுகாதார குழும திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் இப்பணிகள் நிரப்பப்பட உள்ளன. இவை முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ, சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது.
விண்ணப்பங்களை https://tirunelveli.nicin என்ற இணையதளத்தில் கல்வித் தகுதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் 31.12.2024 மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். நேரிலோ அல்லது தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.



No comments:
Post a Comment