THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Thursday, January 30, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2025

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மகாத்மா காந்தி 



திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: குடிமை

குறள் எண்: 959

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

பொருள்:
நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.

பழமொழி :

தோல்வி உன்னைத் தோற்கடிக்கும் முன் தோல்வியை நீ தோற்கடித்து விடு. 

Defeat the defeat before the defeat defeats you.

இரண்டொழுக்க பண்புகள் :   

 *எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன். 

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக்கூடாது. அது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்--- தந்தை பெரியார்

பொது அறிவு : 

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் .

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

English words & meanings :

 Hill      -     மலை
 
 Island         -     தீவு

வேளாண்மையும் வாழ்வும் : 

 நீர் மேலாண்மை என்பது நீர் வளங்களைத் திட்டமிடுதல், அபிவிருத்தி செய்தல், வரவு செலவுத் திட்டம், ஒழுங்குபடுத்துதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது.

ஜனவரி 30

மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 


மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்Mohandas Karamchand Gandhiகுசராத்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. 

நீதிக்கதை

 தலைமை அமைச்சர்


ஒரு அரசன் தன்  முக்கிய அமைச்சர்கள் நால்வரை அழைத்து அவர்களில் ஒருவரை  தலைமை  அமைச்சராக நியமிக்க இருப்பதாக கூறினார்.அதற்கு அவர் தான் வைக்கும் தேர்வில்  வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.


தேர்வு இதுதான். கணித முறைப்படி அமைக்கப்பட்ட பூட்டை யார் விரைவில் திறக்கிறார்களோ அவரே வெற்றியாளர்.


 மூன்று அமைச்சர்கள் அன்று இரவு முழுவதும் கணிதம் பற்றிய புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். ஒருவர்  மட்டும் நிம்மதியாகத் தூங்கிவிட்டார்.


மறுநாள் அரசவையில் பூட்டு கொண்டு வந்து வைக்கப்பட்டது. பூட்டின் அமைப்பு எல்லோரையும் படபடக்க வைத்தது. புத்தகங்களையும் ஓலை சுவடிகளையும் கொண்டு வந்திருந்த மூன்று அமைச்சர்களும் அவற்றை முன்னும் பின்னும் புரட்டி விடை காண முயன்றனர். ஆனால் பூட்டை திறக்கும் வழி அவர்களுக்கு தெரியவில்லை. 


இரவில் நன்கு தூங்கிய அமைச்சர் மெதுவாக எழுந்து வந்து பூட்டை கவனமாக ஆராய்ந்தார். கூர்ந்து கவனித்த அவருக்கு பூட்டு பூட்டப்படவே இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சாவியும் இல்லாமல் எந்த கணித சூத்திரத்தின் பயனும் இல்லாமல் பூட்டை இலகுவாகத் திறந்த அவருக்கே  தலைமை அமைச்சர் பதவியை மன்னர் வழங்கினார்.


நீதி :  முதலில் பிரச்சனை என்னவென்று கூர்ந்து கவனித்து அறிந்து கொண்டு, பின்பு அதற்கு தீர்வு காண வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.01.2025

* தமிழகத்தில் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னையில் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சிற்றுந்து பேருந்துகளை இயக்கலாம். மேலும், சிற்றுந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

* சாதனை படைக்கும் சென்னை மெட்ரோ.. உலகிலேயே முதல்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைகின்றன.

* சமையல் உதவியாளர் பணிக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க விலக்கு அளித்து பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* இஸ்ரோ 100 வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15- என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்.

* ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் வெற்றி.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 5 வது இடத்திற்கு முன்னேற்றம்.

Today's Headlines

* The Tamil Nadu government has permitted a new mini-bus project in Tamil Nadu. Accordingly, minibusses can be operated in expanded areas in Chennai. Also, minibus fares have been raised.

*Chennai Metro made a historical achievement...for the first time in the world, they are building 5 rails in a single pillar.

* The High Court has ordered an interim injunction to the state for excluding the physically challenged people from applying for the cooking assistant job in schools.

* ISRO 100th Rocket GSLV F-15- successfully launched with NVS-02 satellite.

* ISL Callball Tournament: Jamshedpur won the Punjab team.

* ICC Test ranking: Indian player Varun Emperor Progressed to 5th place

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK