Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 24, 2025

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கை; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலைக்கழகம்


எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர டான்செட் என்ற பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர வேண்டுமானால் சீட்டா என்ற பொது நுழைவுத்தேர்வு எழுத வேண்டு். இந்த இரண்டு நுழைவுத்தேர்வுகளையும் தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா பொது நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதன்படி, டான்செட் எம்சிஏ நுழைவுத்தேர்வு மார்ச் 22-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், அதேபோல், எம்பிஏ நுழைவுத்தேர்வு அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், சீட்டா பொது நுழைவுத்தேர்வு மார்ச் 23-ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் நடைபெற உள்ளன இந்நுழைவுத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டான்செட், சீட்டா பொது நுழைவுத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி உடைய பட்டதாரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.annauniv.edu) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டான்செட் நுழைவுத்தேர்வு செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment