Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 19, 2025

+2 வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானம் ஓட்ட தகுதி பெறலாம்


பன்னிரண்டாம் வகுப்பில் கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விரைவில் இந்தியாவில் கமர்ஷியல் விமானங்களுக்கான விமானிகளாகப் பணியாற்ற அனுமதிக்கப்படலாம்

"கமர்ஷியல் விமானி உரிமம் (CPL) பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற தற்போதைய தகுதித் தேவையை நீக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பரிசீலித்து வருகிறது. ஆனால் மருத்துவத் தகுதிக் கூறுகள் அனைவருக்கும் பொருந்தும்" என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த வகைப் பணியானது 1990களின் நடுப்பகுதி முதல் அறிவியல் மற்றும் கணிதம் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன்பு, இந்த உரிமத்தைப் பெறுவதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கல்வித் தேவையாக இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த மாற்றம் குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.

"இந்த முடிவு இறுதியான பிறகு, இந்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அவர்கள் அதை அங்கீகரித்தவுடன் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கமர்ஷியல் விமானி உரிமத்திற்கான பயிற்சி திறக்கப்படும்"

"சிபிஎல் பயிற்சிக்குத் தகுதி அளவுகோலாக 12ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் தேவை என்ற நிபந்தனையை இந்தியாவை தவிர வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இது ஒரு பழமையான தேவை. 12ஆம் வகுப்பில் கற்பிக்கப்படும் இயற்பியல் மற்றும் கணிதம் விமானிகளுக்குத் தேவையில்லை. அவர்கள் ஏற்கெனவே உள்ள வகுப்புகளில் படித்தவற்றிலிருந்து இந்தப் பாடங்களைப் பற்றிய தேவையான புரிதலைக் கொண்டிருக்கலாம்"

"ஏனென்றால், வணிக ரீதியான விமானிகள் ஆக விரும்பும் கலை மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கு இந்த விதி ஒரு தடையாக இருந்து வந்துள்ளது. அத்தகைய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்வதற்குத் தகுதி பெற ஓப்பன் ஸ்கூலில் இயற்பியல் மற்றும் கணிதத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டியுள்ளது"

"இந்தியாவில் வளர்ந்து வரும் விமானத் தொழிலின் மனிதவளத் தேவையைப் பூர்த்தி செய்ய விமானிக்கான பயிற்சியை ஒழுங்குபடுத்த பல்வேறு பரிந்துரைகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் வணிக விமானி உரிமம் (CPL) பயிற்சியை முடிக்க ஆகும் நேரம் போன்ற பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள பயிற்சிப் பள்ளிகளுக்கு தரவரிசை வழங்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது.

இதுவரை, முக்கியமாக இந்த இரண்டு விஷயங்களில் இருந்த கவலைகள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் தங்கள் சிபிஎல் பயிற்சிக்கு வெளிநாடு செல்கின்றனர்"

No comments:

Post a Comment