Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 25, 2025

10.54 நிமிடத்தில் செயலி அரசு ஆசிரியர்கள் அசத்தல்


சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 27 பேர், புதிய கல்வி மொபைல் செயலியை, 10.54 நிமிடத்தில் உருவாக்கி உலக சாதனை படைத்தனர்.

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ராசிபுரம் ரோட்டரி மற்றும் இன்னர்வீல் சங்கம், புதுச்சேரி ஆல் இந்தியா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில், மொபைல் கல்வி செயலி உருவாக்கத்தில் உலக சாதனைக்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 27 பேர், மொபைல் கல்வி செயலி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதில், சாய்சதுரத்தின் பரப்பளவை கணக்கிடுதல், இரண்டு எண்களின் கூடுதல், கழித்தல், அடர்த்தி அளவுகோல், செவ்வகத்தின் பரப்பளவு, வேகம், லென்சின் குவிய தொலைவு, திசை வேகம்.

விட்டத்தை கண்டறிதல். பேச்சொலியை எழுத்துருவாக மாற்றுதல், எண்களின் வர்க்கம், வட்டத்தின் சுற்றளவு, கனசதுரத்தின் மொத்த மேற்பரப்பளவு, கனசதுரத்தின் கன அளவு, கோளத்தின் மொத்த புறப்பரப்பு, மின்னோட்டம் உள்ளிட்டவற்றை கணக்கிடுதல் போன்ற செயலிகளை, 10.54 நிமிடத்தில் உருவாக்கி சாதனை படைத்தனர்.

No comments:

Post a Comment