Join THAMIZHKADAL WhatsApp Groups

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பி.டெக்., பி.எஸ்சி., பட்டப் படிப்புகள் மற்றும் பி.எச்.டி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழு தலைவர் செல்வராஜூ செய்திக்குறிப்பு:
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 2025-26ம் ஆண்டிற்கான இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. நான்காண்டு பொறியியல் இளநிலை படிப்பிற்கான விண்ணப்பங்கள் சென்டாக் மூலம் பெறப்பட்டு, தரவரிசைப்படி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
டிப்ளமோ படித்து இரண்டாம் ஆண்டு பி.டெக்., படிப்புகளில் நேரடியாக கல்வி பயில தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து சென்டாக் மூலம் 26ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் தலா 6 காலியிடங்கள் வீதம் மொத்தம் 53 காலியிடங்கள் உள்ளன.
முதுநிலை ஈராண்டு படிப்புகளான எம்.டெக்., எம்.எஸ்சி., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பெறப்பட்டு, 297 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முழு மற்றும் பகுதி நேர பி.எச்.டி., ஆராய்ச்சி படிப்பிற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் ptunivedu.in என்ற இணைய தளத்தின் மூலம் ஜூலை 4ம் தேதி வரை பெறப்பட்டு சரிபார்க்கப்பட உள்ளன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 19ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தி அதில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆக., 8 மற்றும் 9ம் தேதிகளில் நேர்முக தேர்வு நடக்க உள்ளது. மேலும், இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைகளில் தர வரிசையில் முன்னிலை வகிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசின் விஸ்வேஸ்வரய்யா ஆராய்ச்சி நிதியின் மூலம் மாதம்தோறும் ரூ. 38,750 நிதியுதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
No comments:
Post a Comment