Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 30, 2025

இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஜூலை 14 முதல் நியமன கலந்தாய்வு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்க கல்வி துறை இயக்​குநர் நரேஷ் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை: தொடக்க கல்வி துறை​யில் மலை சுழற்சி மாறு​தல் கலந்​தாய்வு (21 ஒன்​றி​யங்​களுக்கு மட்​டும்) ஜூலை 2-ல் நடை​பெறும். இடைநிலை ஆசிரியர்​களுக்​கான பணிநிர​வல் கலந்​தாய்வு ஒன்​றி​யம் கல்வி மாவட்​டத்​துக்​குள் ஜூலை 3-ம் தேதி​யும், வரு​வாய் மாவட்​டத்​துக்​குள் ஜூலை 4-ம் தேதி​யும் நடத்​தப்​படும்.

இடைநிலை ஆசிரியர்​களின் பொது மாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 5-ல் தொடங்கி 11-ம் தேதி வரை நடை​பெறும். தொடக்​கப் பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூலை 19, 21-ம் தேதி​களி​லும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கான கலந்​தாய்வு ஜூலை 22, 23-ம் தேதி​களி​லும் நடத்​தப்​படும்.

மேலும், பட்​ட​தாரி ஆசிரியருக்​கான இடமாறு​தல் கலந்​தாய்வு ஜூலை 24 முதல் 30-ம் தேதி வரை நடை​பெறும். இதுத​விர, இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் தேர்​வான நபர்​களுக்​கான நேரடி பணி நியமன கலந்​தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி அந்​தந்த மாவட்​டங்​களில் நடத்​தப்பட உள்​ளது. கலந்​தாய்வு நடத்​து​வதற்​கான மின் இணைப்​பு, இணை​யதளம், இருக்கை வசதி உள்​ளிட்டஅனைத்து முன்​னேற்​பாடு​களை​யும் மாவட்ட கல்வி அலு​வலர்​கள் மேற்​கொள்ள வேண்​டும்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News