JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பிளஸ் 1 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று (ஜூன் 30) வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதியவர்களில் மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று (ஜூன் 30) மதியம் வெளியிடப்படுகிறது. அதன் விவரங்களை மாணவர்கள் தேர்வுத் துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த பட்டியலில் இடம்பெறாதவர்களின் விடைத்தாள்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றமுள்ள மாணவர்கள் மட்டுமே மேற்கண்ட தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment