Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 17, 2025

தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இந்த ஆண்டு 2025 கட் ஆஃப் எப்படி இருக்கும்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
NEET UG 2025 Expected Cut Off: தமிழக அரசு மருத்துவ கவுன்சலிங்கில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கட் ஆஃப் எப்படி இருக்கும்? நிபுணர் கணிப்பு

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எந்த வரை கட் ஆஃப் வரை எம்.பி.பி.எஸ் சீட் கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு (NEET UG 2025) மே 4 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி.எஸ் (BDS), ஆயுர்வேதம் (BAMS), யுனானி (BUMS), ஹோமியோபதி (BHMS) மற்றும் சித்தா (BSMS) போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஒரே நுழைவுத் தேர்வாக ஆகும்.

இந்த நீட் தேர்வுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு முடிவுகளின் படி, கடந்த ஆண்டை விட கட் ஆஃப் மதிப்பெண்கள் பிரிவு வாரியாக 120 வரை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கில் 22 தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் சேனலில் விளக்கியுள்ளார்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் கல்விக் கட்டணமாக 1 – 1.25 லட்சம் உள்ளது. பிற தனியார் கல்லூரிகளில் 4.5 – 5 லட்சம் வரை கல்வி கட்டணம் உள்ளது. இதுதவிர விடுதி கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்கள் உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகள்

கடந்த ஆண்டு கட் ஆஃப்

பொதுப் பிரிவு – 612

பி.சி – 576

பி.சி.எம் – 560

எம்.பி.சி – 565

எஸ்.சி – 474

எஸ்.சி.ஏ – 407

எஸ்.டி – 415

இந்த ஆண்டு 2025 எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு – 480 - 490

பி.சி – 460 - 470

பி.சி.எம் – 440 - 450

எம்.பி.சி – 445 - 455

எஸ்.சி – 382 - 387

எஸ்.சி.ஏ – 328 - 334

எஸ்.டி – 338 - 345

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News