Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 17, 2025

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி பொருட்கள் வாங்க லேட் ஆகாது! கைரேகை பதிவு 70% ஆக குறைப்பு!


இனி ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்வோருக்கு அதிக நேரம் ஆகாது. கை ரேகை பதிவு 90% ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என இருந்த நிலையில், தற்போது கைரேகை 70% ஒத்துப்போனாலே போதும் என மாற்றப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் மின்னணு விற்பனை (POS) கருவி மூலம் பொருட்கள் விநியோகத்திற்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. 

ரேஷன் கடைகளில் இந்த மின்னணு எந்திரத்தில் ரேஷன் அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் யாராவது கைரேகை வைத்தால் மட்டுமே ரசீது போடும் வகையில் POS கருவியின் மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த கைரேகையானது ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும். 

அதாவது, கை ரேகை பதிவு 90% ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இதனால், பெரும்பாலான கைரேகை பதிவுகளுக்கு குறைந்தபட்சம் 2, 3 முறையாவது கை விரலை வைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், அதிக கால விரயம் ஏற்பட்டு வருகிறது. 

கைரேகை பதிவு சரியாக இல்லாதபட்சத்தில், கருவிழி பதிவு கருவி மூலம் சரிபார்க்கப்பட்டு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்கு இன்னும் கூடுதல் நேரம் ஆகிறது. Powered By கைரேகை பதிவு விதியில் மாற்றம் இந்நிலையில், கைரேகை அங்கீகார விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது ரேஷன் கடைகளில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.

முன்பு கைரேகை 40% துல்லியமாக ஒத்துப்போனாலே பொருட்கள் வழங்கப்பட்டன. அதன்பிறகு இது 90% துல்லியமாக ஒத்துப்போக வேண்டும் என்று மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது 70 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனை இன்னும் 10 சதவீதம் குறைத்து, 60% என ஆக்குவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

பொதுமக்கள் ஹேப்பி இந்த மாற்றம் காரணமாக, தற்போது ரேஷன் கடைகளில் நாள்தோறும் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் விரைவாக வழங்கப்பட்டு வருகின்றன. முன்பை விட சற்று வேகமாக ரசீது போட முடிகிறது என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ரேஷன் கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் விரைவாக பொருட்களை வாங்கி விட்டு திரும்ப முடிவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment