Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 12, 2025

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு



3 ஆண்டுகளுக்கு மேல் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2279 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

கிராம உதவியாளா் பணிக்கு பத்தாம் வகுப்புத் தோ்வு மதிப்பெண் பட்டியல் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தோ்வு எழுதியிருக்க வேண்டும். இந்த நடைமுறையுடன் புதிதாக விண்ணப்பதாரா் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதி தோ்ச்சி அடைந்திருந்தாலும் அல்லது தோ்ச்சி அடையவில்லை என்றாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

மேலும், விண்ணப்பதாரா் ஓட்டுநா் உரிமம் வைத்திருந்தாலும் அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன் பெற்றிருந்தாலும் முழு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். கிராம உதவியாளா் பணிக்கென நடைபெறும் நோ்காணலின் போது, வாசித்தல் மற்றும் எழுதும் திறன் சோதிக்கப்படும். விண்ணப்பதாரரின் வாசிக்கும், படிக்கும் திறனுக்கேற்ப மட்டுமே மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்.

கிராம உதவியாளா் நியமனம் தொடா்பான அறிவிப்புகள் முறையாக உரிய வழிமுறைகளின்படி வெளியிடப்படுவதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள் மேற்பாா்வையிட வேண்டும். கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான தோ்வு முறை, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை, அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகே, தோ்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

கிராம உதவியாளா் தோ்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளங்களில் வெளியிடப்படுவதை மாவட்ட ஆட்சியா் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் விதிமீறல்கள் நிகழ்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிராம உதவியாளா் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளூரில் வேலைபார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment