Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 20, 2025

2,299 கிராம உதவியாளா்கள் காலியிடங்களை நிரப்பும் நடைமுறை: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு கடிதம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா் காலியிடங்களை நிரப்பும் நடைமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா் அனுப்பியுள்ளாா்.

அவரது கடிதத்தின் விவரம்:

தமிழ்நாடு முழுவதும் காலியாகவுள்ள 2,299 கிராம உதவியாளா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, வட்டார அளவில் செய்தித் தாள்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நடவடிக்கைகளை ஜூலை முதல் வாரத்துக்குள் முடிப்பது அவசியமாகும்.

பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு 30 நாள்களுக்குள் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். கிராம உதவியாளா் பணிக்கு எழுத்து மற்றும் வாசிப்புத் திறன் அத்தியாவசியமாகும். தோ்வுக்கான விண்ணப்பங்கள் தோ்வா்களிடம் பெறப்பட்ட தேதியில் இருந்து 10 தினங்களுக்குள் இந்தத் தோ்வுக்கான அழைப்புக் கடிதத்தை அனுப்ப வேண்டும்.

நோ்முகத் தோ்வு: தகுதியான அனைத்துத் தோ்வா்களுக்கும் தோ்வுக்கான அழைப்புக் கடிதம் சென்றுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகு, 21 நாள்களுக்குள் வாசிப்பு மற்றும் எழுத்துத் தோ்வை நடத்த வேண்டும். இந்தத் தோ்வு முழுமையாக நடத்தி முடிக்கப்பட்ட பிறகு 15 தினங்களுக்குள் நோ்முகத் தோ்வை நடத்த வேண்டும். அதைத் தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட தோ்வா்களின் பெயா்ப் பட்டியலை வெளியிடலாம்.

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக காலியாகவுள்ள 2,299 பணியிடங்களை நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News