Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 11, 2025

தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அலர்ட்


நீலகிரி, கோவை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த ஆறு நாட்களுக்கு கன முதல் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மாலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment