Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC Group 4 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு; நடப்பு நிகழ்வுகளுக்கு என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்? வெற்றிக்கான சிம்பிள் சூத்திரம் இங்கே
/tamil-ie/media/media_files/uploads/2023/03/TNPSC-Group-4.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், நடப்பு நிகழ்வுகளுக்கு (Current Affairs) என்ன படிக்க வேண்டும்? எப்படி படிக்க வேண்டும்? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் எளிதான பகுதியாக தேர்வர்களால் கருதப்படும். பொது அறிவு எப்போது கடினமான பகுதியாக கருதப்படும். அதேநேரம் கணிதம் மற்றும் திறனறி அடங்கிய பகுதியும் சற்று கடினமானதாக உணரப்படும். ஆனால் சில டெக்னிக் மற்றும் சரியான பயிற்சியுடன் படித்தால் கணிதம் மற்றும் திறனறி பகுதியிலும் அதிக மதிப்பெண் பெறலாம்.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளை எப்படி படிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக விருட்சம் டி.என்.பி.எஸ்.சி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி,
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் முன்னர் நடப்பு நிகழ்வுகள் தனி தலைப்பாக இருந்தது. அதில் உள் தலைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன. நாம் அது தொடர்பாக படித்தால் போதும். ஆனால் தற்போது பாடத்திட்டம் மாற்றப்பட்ட, ஒவ்வொரு தலைப்பின் கடைசியிலும் நடப்பு நிகழ்வுகள் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் உள்ள உட்தலைப்புகள் தொடர்பான நடப்பு நிகழ்வுகளை நாம் படித்துக் கொள்ள வேண்டும்.
விருதுகள், குறியீடுகள், நிர்வாகம், திட்டங்கள், கமிட்டிகள், நியமனங்கள், இந்தியா மற்றும் தமிழகத்தில் முதலில் தொடங்கப்பட்டவை, அறிவியல், டெக்னாலஜி, விளையாட்டு, முக்கிய தேதிகள், சுற்றுச்சூழல், மாநாடுகள், புவியியல் இடங்கள், வரலாறு, கண்டுபிடிப்புகள், புத்தகங்கள், நோபல் பரிசு, முதல் பெண்கள் போன்றவை தொடர்பான நடப்பு நிகழ்வுகளை படித்துக் கொள்ள வேண்டும்.
குறைந்தபட்சம் 6 முதல் 8 மாத நடப்பு நிகழ்வுகளை படித்துக் கொள்ளுங்கள். அதிகபட்சமாக ஒரு வருட நடப்பு நிகழ்வுகளை படித்துக் கொள்ளுங்கள். தினசரி செய்தி தாள் மற்றும் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் புத்தகங்களை படித்துக் கொள்ள வேண்டும். தினசரி செய்தித்தாள் படிக்கும் போது குறிப்பு எடுத்து படித்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment