Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை 2025: இன்ஜினியரிங் கட் ஆஃப் கணிசமாக உயர்வு; கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு எந்தக் கல்லூரியில் சீட் கிடைக்கும் என விளக்கும் நிபுணர்
/indian-express-tamil/media/media_files/VGZfTkhPSsWvk3hoSi4d.jpg)
தமிழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கட் ஆஃப் கணிசமாக உயர்ந்துள்ளதாக நிபுணர் கூறுகிறார். எனவே எந்த கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தக் கல்லூரி கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்ப்ப பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 6 ஆம் தேதி முடிவடைந்தது. 2.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்று (ஜூன் 27) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த ஆண்டு கட் ஆஃப் கூடுமா? குறையுமா? என்பதை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் விளக்கியுள்ளார்.
Advertisements
இந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் 0.5 முதல் 45 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1.9 லட்சத்திற்கும் மேலானவர்கள் கவுன்சலிங்கில் கலந்துக் கொண்ட நிலையில், இந்த 2.39 லட்சம் பேர் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆண்டு 141 பேர் 200க்கு 200 கட் ஆஃப் வைத்துள்ளனர். எனவே 199.50 - 200 கட் ஆஃப் ரேஞ்சில் 0.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 198.50 - 199 கட் ஆஃப் ரேஞ்சில் 1 கட் ஆஃப் அதிகரிக்கும். 197.50 - 198 கட் ஆஃப் ரேஞ்சில் 1.5 கட் ஆஃப் அதிகரிக்கும். 196.50 - 197 கட் ஆஃப் ரேஞ்சில் 2 கட் ஆஃப் அதிகரிக்கும்.
195 - 196 கட் ஆஃப் ரேஞ்சில் 2.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
192 - 194.50 கட் ஆஃப் ரேஞ்சில் 3 கட் ஆஃப் அதிகரிக்கும்.
190.50 - 191.50 கட் ஆஃப் ரேஞ்சில் 3.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
188.50 - 190 கட் ஆஃப் ரேஞ்சில் 4 கட் ஆஃப் அதிகரிக்கும்.
186.50 - 188 கட் ஆஃப் ரேஞ்சில் 4.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
185 - 186 கட் ஆஃப் ரேஞ்சில் 5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
183.50 - 184.50 கட் ஆஃப் ரேஞ்சில் 5.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
181.50 - 183 கட் ஆஃப் ரேஞ்சில் 6 கட் ஆஃப் அதிகரிக்கும்.
180 - 181 கட் ஆஃப் ரேஞ்சில் 6.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
175க்கு மேல் 8 கட் ஆஃப் அதிகரிக்கும்.
170க்கு மேல் 9.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
165க்கு மேல் 11 கட் ஆஃப் அதிகரிக்கும்.
160க்கு மேல் 12 கட் ஆஃப் அதிகரிக்கும்.
155க்கு மேல் 11.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
150க்கு மேல் 15 கட் ஆஃப் அதிகரிக்கும்.
145க்கு மேல் 16.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
140க்கு மேல் 18 கட் ஆஃப் அதிகரிக்கும்.
135க்கு மேல் 20.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
130க்கு மேல் 22 கட் ஆஃப் அதிகரிக்கும்.
125க்கு மேல் 26 கட் ஆஃப் அதிகரிக்கும்.
120க்கு மேல் 37 கட் ஆஃப் அதிகரிக்கும்.
115க்கு மேல் 37.5 கட் ஆஃப் அதிகரிக்கும்.
110க்கு மேல் 40 கட் ஆஃப் அதிகரிக்கும்.
105க்கு மேல் 45 கட் ஆஃப் அதிகரிக்கும்.
100க்கு மேல் 50 கட் ஆஃப் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment