Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 23, 2025

அறிவியலறிஞர் விருதுக்கு விண்ணப்பிக்க மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அழைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அறிவியல் துறையில் சாதனை புரிந்தவர்கள் தமிழக அறிவியலறிஞர் விருதுக்கு விண்ணப் பிக்கலாம் என மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. மொத்தம் 10 பிரிவுகளில் வழங்கப்படு்ம இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது ஆகும்.

இது தொடர்பாக தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் - செயலர் எஸ்.வின்சென்ட் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: "தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல்வேறு துறைகளில் சிறந்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை புரிந்த அறிவியலாளர்களுக்கு தமிழக அறிவியலறிஞர் விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இந்த விருது வேளாண் அறிவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், கால் நடை மருத்துவம், கணக்கியல், சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. இது, ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது. இந்த ஆண்டுக்கான விருது முன்மொழிவுக்கான விண்ணப்பங்களை மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் இணையதளத்தில் (www.tanscst.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனைத்து தகவல்களையும் கொண்ட புத்தக வடிவிலான 4 நகல்களை, "உறுப்பினர்- செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்பக் கல்வி இயக்கக வளாகம், கிண்டி, சென்னை 600 025" என்ற முகவரிக்கு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News