Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 9, 2025

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் டிஆர்பி தீவிரம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசு பள்ளி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்​வுக்​கான முன்​னேற்​பாடு​களை ஆசிரியர் தேர்வு வாரி​யம் மும்​முர​மாக மேற்​கொண்டு வரு​கிறது. திட்​ட​மிட்​டபடி தேர்​வுக்​கான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளி​யிடப்பட உள்​ளது.

கல்​லூரி உதவி பேராசிரியர் பணி​யில் சேர வேண்​டு​மா​னால் நெட் அல்​லது செட் தகு​தித்​தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும். நெட் தேர்வு யுஜிசி சார்​பிலும் செட் தகு​தித் தேர்வு அந்​தந்த மாநில அளவிலும் நடத்​தப்​படு​கின்​றன. தமிழகத்​தில் செட் தேர்வு நடத்​தும் பொறுப்பு தற்​போது ஆசிரியர் தேர்வு வாரி​யத்​திடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

அந்த வகை​யில், ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்​தப்​பட்ட ‘செட்’ தகு​தித்​தேர்வு முடிவு ஏறத்​தாழ 3 மாதங்​கள் ஆகி​யும் இன்​னும் வெளி​யிடப்​ப​டா​மல் உள்​ளது. செட் தேர்வு முடிவு வந்​தவுடன் அடுத்​தகட்​ட​மாக உதவி பேராசிரியர் பணிக்​கான நியமனத் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். அதன்​படி, தேர்​வுக்கு விண்​ணப்​பித்​ததவர்​கள் அதற்​காக முழு மூச்​சில் தயா​ராகி வரும் நிலை​யில், செட் தேர்​வுக்​கான முடிவு அறிவிக்​கப்​ப​டா​மல் இருப்​பது அவர்​களை சோர்​வடையச் செய்​துள்​ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் உயர் அதி​காரி ஒரு​வரிடம் கேட்​ட​போது, “செட் தேர்வு தொடர்​பாக உயர் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கு நிறைவடை​யும் தரு​வா​யில் உள்​ளது. வழக்கு முடிவுக்கு வந்​தவுடன் செட் தகு​தித்​தேர்வு முடிவு வெளி​யிடப்​பட்டு அதைத்​தொடர்ந்து உடனடி​யாக உதவி பேராசிரியர் பணிக்​கான போட்​டித்​தேர்வு நடத்​தப்​படும்” என்​றார்.

அந்த அதி​காரி மேலும் கூறும்​போது, “முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் பதவி​யில் 1,915 இடங்​களை நிரப்​புவதற்​கான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளி​யிடப்​பட்டு நவம்​பரில் தேர்வு நடத்​தப்​படும் என வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படியே முதுகலை ஆசிரியர் தேர்​வுக்​கான அறி​விப்பு ஆகஸ்ட் மாதம் வெளி​யிடப்​படும். தேர்வு நடத்​து​வதற்​கான முன்​னேற்​பாடு​கள் தற்​போது முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் முதுகலை ஆசிரியர் பணிக்கு கூடு​தல் காலி​யிடங்​கள் கேட்​கப்​பட்​டுள்​ளன. எனவே, காலிப்​பணி​யிடங்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. இந்த தேர்வு புதிய பாடத்​திட்​டத்​தின்​படி நடத்​தப்​படும்” என்​றார்.

டெட் தேர்வு இல்லை: இதற்​கிடையே, தமிழகத்​தில் கடந்த 2022-க்​கு பிறகு கடந்த 3 ஆண்​டாக ஆசிரியர் தகு​தித்​தேர்வு (டெட்) நடத்​தப்​ப​டாதது இடைநிலை ஆசிரியர்​களை​யும் பிஎட் முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​களை​யும் கவலை​யில் ஆழ்த்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்​துகிறது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்​சில் (என்​சிடிஇ) விதி​முறை​யின்டி ஆண்​டுக்கு 2 தடவை டெட் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். இந்த விதி​முறை​யின்​படி, மத்​திய அரசு பள்ளி ஆசிரியர்​களுக்​கான ‘சி-டெட்’ தகு​தித்​தேர்வு ஆண்​டுக்கு 2 முறை திட்​ட​மிட்​டபடி நடத்​தப்​படு​கிறது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரி​யம் ஏனோ அது​போன்று டெட் தேர்வை ஆண்​டு​தோறும் நடத்​து​வ​தில்​லை.

மேலும் 2025-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்ட வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் டெட் தேர்வு குறித்த அறி​விப்பு இடம்​பெற​வில்​லை. எனவே, இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்​தப்​படு​வதற்கு வாய்ப்பே இல்​லை. தற்​போது அரசு பள்​ளி​களில் பதவி உயர்​வுக்​கும் டெட் தேர்வு கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 3 ஆண்​டாக டெட் தேர்வு நடத்​தப்​ப​டாத​தால் ஆசிரியர் பணி​யில் சேரு​வோர் மட்​டுமின்​றி, ஏற்​கெனவே பணி​யில் உள்ள ஆசிரியர்​களும் பதவி உயர்வு பெற முடி​யாமல் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரி​யம் இவற்றை எல்​லாம் கருத்​தில்​கொண்டு சி-டெட் தேர்வு போல் டெட் தேர்​வை​யும் ஆண்​டு​தோறும் நடத்த வேண்​டும் என்று பாதிக்​கப்​பட்ட ஆசிரியர்​கள் வேண்​டு​கோள் விடுத்​துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News