Join THAMIZHKADAL WhatsApp Groups

📌📌📌📌📌📌📌📌
நண்பர்களே வணக்கம்
நேற்று மாலை முதல் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி ஊடகங்களின் வழியாக பதிவிடப்பட்டு வருகிறது. அது குறித்த விளக்கம்
➖➖➖➖➖➖➖➖
🎯 பள்ளிக்கல்வித்துறை அரசாணை நிலையம் 261 நாள் 20.12 .2018 படி கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், உபரி ஆசிரியர் பணி இடங்கள் இருக்கும்போது மறு நியமனம் செய்யக்கூடாது. உபரி அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது
🎯பள்ளிக்கல்வித்துறை அரசாணை நிலை எண் 115 நாள் 28.6.2022 இன் படி கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் வழங்க ஆணை வழங்கப்பட்டது
🎯இருப்பினும் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் என்பது மே மாதம் 31ஆம் தேதி ஆகும். ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணி தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியிருப்பதால் அவர்களுக்கு மே 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கூறி நாம் பல்வேறு வகையான ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு பெற்று வந்துள்ளோம்
🎯இந்த ஆண்டு கூட ஏப்ரல் 30ஆம் தேதி ஓய்வு பெற்றவர்களுக்கு மே மாதம் பணி நீட்டிப்பு பெற்று வழங்கியுள்ளோம்
🎯ஆனால் தற்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக கடைசி வேலை நாள் வரை மட்டுமே பணி நீட்டிப்பு வழங்க இயலும் என அறிவித்துள்ளார்
🎯இது முற்றிலும் ஆசிரியர் நலனுக்கு எதிரானது. ஆகவே மே மாதம் 31 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முன்னெடுக்கும்
🎯இதனை *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் ஆகவே பணிநீட்டிப்பு மறுக்கப்பட்டது என்பது உண்மை அல்ல.*
🎯கல்வியாண்டின் கடைசி நாள் வரை பணிநீட்டிப்பு உள்ளது.அதை மே 31ஆம் தேதி வரைக்கும் பெற்று தருவதற்கு அமைப்பு தொடர்ந்து முயற்சிக்கும் கண்டிப்பாக பெற்று தரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
➖➖➖➖➖➖➖➖
பொதுச் செயலாளர்_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment