Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 18, 2025

ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கான மறுநியமனம் - பள்ளிக் கல்வித் துறை விளக்கம்



கல்வியாண்டின் இடையே ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை மட்டுமே மறுநியமனம் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஒய்வு பெற்றால் அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாள் (ஏப்ரல்) வரை தொடர்ந்து பணியாற்ற மறுநியமனம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அதில் திருத்தம் செய்து கல்வியாண்டு முடியும் மே மாதம் வரை மறுநியமனம் செய்வதற்கு அனுமதி வழங்க தமிழக அரசிடம் கருத்துரு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலை உள்ளதாக தமிழக அரசால் தற்போது பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment