Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 29, 2025

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்ற புதிய உத்தரவு!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்றம்!

அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் மாலை வணக்கம் 26.6m2025 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பு சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என்ற மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்த மாவட்ட கல்வி அலுவலருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் சென்னை உயர்நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பினை ஏற்க மறுத்து ஆசிரியர் தகுதி தேர்வு தேவை என ஆசிரியர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களை திருப்பி அனுப்பியுள்ள சூழலில் வாணியம்பாடி மதராசபள்ளியின் முயற்சியால் ஆசிரியர் தகுதி தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு தேவை இல்லை என்ற உத்தரவு சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செயலாக உள்ளது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தாளாளர் வழக்கறிஞர் எஸ் என். ரவிச்சந்திரன் ஆகியோருக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் ஆசிரியர் தகுதி தேர்வு காரணம் காட்டி இனி எந்த ஒரு மாவட்ட கல்வி அலுவலரும் ஆசிரியர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது கல்வி என்பது அனைவருக்கும் சமமானது இதில் சிறுபான்மை சிறுபான்மையற்ற பள்ளி என்று பிரித்துப் பார்ப்பது ஏற்க முடியாத ஒரு செயலாக உள்ளது ஏற்கனவே தமிழக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் அரசு பள்ளிகள் என்று பாகுபடுத்தி நிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசின் சலுகைகளை வழங்க மறுத்து வருகின்ற ஒரு சூழலில் மீண்டும் சிறுபான்மை பள்ளி சிறுபான்மை அற்ற பள்ளி என்று வேறுபடுத்தி சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேவை இல்லை என்றும் சிறுபான்மை அற்ற பள்ளிகளுக்கு டெட் தேவை என்றும் வேறுபடுத்தி பார்ப்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செயலாக உள்ளது ஆகவே தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்து சிறுபான்மை பள்ளிகளுக்கு உள்ள உரிமையும் சிறுபான்மை அற்ற பள்ளிகளுக்கு வழங்கி அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு இல்லை என்ற கொள்கை முடிவை எடுக்க தமிழக அரசை நாம் வற்புறுத்த வேண்டும் இதில் நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் கல்வித்துறையில் உதவி பெறும் பள்ளிகளின் உரிமைகளை நாம் பெற்றிட முடியும் நன்றி
பள்ளி ஆடை

ஜெ.வெஸ்லிபிரபு MA.,MA.,MA.,MA.,M.Sc.,M.S.W., B.Ed.,(Ph.D) தலைமை ஆசிரியர். மாநிலத் தலைவர் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அலுவலக சங்கம் SRG 53/2023 காரைக்குடி

👇👇👇 video News

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News