Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 11, 2025

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அவசியம்!

திருநெல்வேலி, ஜூன் 9 நெல்லை, தென் காசி மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்க ளுக்கு நன்னெறி, நீதி போதனைவகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி கள் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. கடந்த ஆண்டுகளில் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிக ளில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற் பட்டது.

மாணவர்கள் கோஷ்டியாக மோதலில் ஈடுபட்டனர். மாணவர் களுக்கு இடையே ஏற் பட்ட சிறிய தகராறு, கருத்துவேறுபாடுகள் பின்பு ஜாதிரீதியிலான மோதலாக உருவெடுத் தது. மோதலில் சில மாணவர்கள் காயமடை யும் சூழலும் ஏற்பட் டது.

பெருங்குற்றத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் சட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொண்டனர். இத னால் துரதிர்ஷ்டவச மாக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. நெல்லை மாநகர், மாவட்டத்தில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் பள்ளி மாணவர்கள், இளஞ்சிறார்கள் ஈடுப டுவது அதிகரித்துள்ளது.

அறியாமையால் வழக் குகளில் சிக்கி எதிர்கா லத்தை தொலைக்கும் மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியாக, கல்வித்துறையுடன் இணைந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் நன்னெறி விளக்கக்கூட்டம் நடக் கும் என போலீசார் ஏற் கனவே அறிவித்தனர்.

நீதிபோதனை அவசியம் பள்ளிகளில் போலி சார் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்து வது ஒருபுறம் இருந் தாலும், வாரந்தோறும் நன்வெறி, நீதிபோதனை வகுப்புகளை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் கூறிய போது, "பள்ளிகளில் நன்னெறி, நீதிபோதனை வகுப்புகளை நடத்தும் முறை முன்பு அமலில் இருந்தது. மாணவர்கள் ஒழுக்கத்தை பள்ளியில் கற்றனர். இந்த வகுப்புகள் வாரத்தில் ஓரிரு நாட் கள் நடக்கும்.

தற்போது இந்த வகுப்புகள் நடப்ப தில்லை. தற்போது வளர் இளம் பருவத்தினருக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளன. அலைபேசி யில் மூழ்கி பல மாணவர் கள் கல்வியை இழக்கும் அவலநிலையில் உள் ளனர். மன அழுத்தம், மனஉளைச்சலில் பலர் தவிக்கின்றனர்.

இதுகுறித்து அரசு பரிசீலித்து பள்ளிகளில் மீண்டும் நீதிபோதனை, நன்னெறி, ஒழுக்கம் சார்ந்த வகுப்புகளை நடத்த வேண்டும்" என்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News