Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 13, 2025

இன்றைய குடும்பத் தலைவிகளின் புலம்பல்கள்....

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அந்த காலத்திலே அம்மா என்ன செய்வாங்க? வீட்டை சுத்தமா வைச்சுகிட்டு, குழம்பு, காய் அல்லதுஇட்லி மிளகா பொடி, கட்டி கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அவ்வளவுதான்.

ஆனால் இப்போ அமெரிக்கன் இதாலி, சைனீஸ், நார்த் இண்டியன், Fast food, எல்லாம் செய்யத் தெரியணும்.

ஸ்கூல், யோகா கிளாஸ், டான்ஸ் கிளாஸ் drop and pick up பண்ண வண்டி ஓட்டத் தெரிந்திருக்கணும்.

இது வரை யாருமே பார்க்காத செய்யாத, நெட்டை நோண்டி பசங்களுக்கு project பண்ணத் தெரியணும்.

நாம பத்தாவதுலே படிச்ச கணக்கை மூணாவது படிக்கிற நம்ம பையனுக்கு சொல்லி கொடுக்க தெரியணும்.

பன்னிரன்டாவது படிக்கிற புள்ளையா இருந்தா Neet எழுதனுமா அல்லது வேறு எந்த Course படிக்கணும்னு analyse பண்ணத் தெரியனும்

ஹஸ்பெண்டுக்கு slima, மாடர்னா இருக்கணும். அவரோட அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கணும்.

அம்மியிலே வைச்சு அரைக்கிற மொளாக சட்டினியும் தெரியனும். ஐபோன்லே இருக்கிற லேடஸ்ட் டெக்னாலஜியும் தெரியணும்.

Professionalலா advice பண்ற PAவாக இருக்கணும். அடுப்படியிலே வேலை செய்யற ஆயாவாகவும் இருக்கணும்.

நாட்டு நடப்பு தெரியணும்

நாட்டு வைத்தியமும் தெரியணும்.

நெத்தியிலே குங்கும் பொட்டு, மல்லிகைப் பூன்னு மங்களகரமாக இருக்கணும். மாடர்ன் டிரஸ்லேயும் கலக்கணும்.

வீடு Museum மாதிரி வைச்சுக்கணும். எவ்வளவு வேலை செஞ்சாலும் சோர்வு மட்டும் தெரியாம சிரிச்சுகிட்டு இருக்கணும்.

எல்லா வேலையும் முடிச்சுட்டு

அப்பாடானு போனை கையிலே எடுத்தா, எப்ப பார்த்தாலும் வாட்ஸ் அப் என்று பேச்சை கேட்கிற பொறுமைசாலியா இருக்கணும்.

இங்கே House wifeஆ இருக்கணும்னா பின்னாலே100 கை இருக்கணும்.

இந்த காலத்திலே தேவை அம்மான்ற பேரிலே All in all அழகு ராணிதான்.


நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News