
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் சேர்க்கை பதிவு முகாமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளாக நடைபெற்று வருகிறது.
இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஏழை எளிய மக்கள் ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவினங்களுக்கு காப்பீடு பெற முடியும்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆனந்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று ஜூன் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.
இதில் ஆனந்தூர் கிராமத்தினைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு திட்ட அட்டைக்கு பதிவு செய்து
பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment