Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 13, 2025

தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் - உடனே விண்ணப்பிக்கவும்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலவச தையல் இயந்திரம் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது. இந்த திட்டத்துக்கான தகுதிகள் மற்றும் எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம் வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகிறது

இந்த திட்டத்தின் மூலம் கைம்பெண், கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு சுய வேலைப்வாய்ப்பு மூலம் வருமானத்தை உயர்த்தும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண்கள் திறன் மற்றும் அறிவு பெறுவதினால் அவர்கள் அதிகாரம் அடைவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிசெய்து அவர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய இயலும். பொருளாதார சுதந்திரத்தின் மூலம் மட்டுமே பெண்கள் அதிகாரம் பெற முடியும். ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, அவள் தன்னை அதிகாரம் பெற்றவளாக கருத இயலும்.

இதை மனதில் கொண்டு சமூக நலத்துறை இயக்குநரகம் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கூட்டு நடவடிக்கையின் மூலம் கூட்டுறவு என்ற கருத்து இந்த கூட்டுறவு சங்கங்களின் பெண் உறுப்பினர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது.

இந்த தொழில் கூட்டுறவு சங்கங்களில், சமுதாயத்தில் பின்தங்கிய 18-40 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள பெண்கள் இந்தச் சங்கங்களில் உறுப்பினர்களாகப்பட்டு, அவர்களுக்குத் நீடித்த வருமானத்தைப் ‘ அளிக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்துக்கான தகுதிகள் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தையல் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 1,20 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News